கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்..
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களின் பட ரிலீஸ் தேதியை ஒரு திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்பது பற்றியும் ஒரு லிஸ்ட் வெளியாகி, வைரலாகி வருகிறது. மேலும் கோலிவுட்டில் டாப் 10 நடிகர்கள் மற்றும் அவர்களின் சம்பள லிஸ்ட் இதோ: ரஜினிகாந்த்: கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் எப்போதும் கெத்தாக முதலில் இருப்பது ரஜினிகாந்த் தான். இவருக்கு தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு மட்டும் ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்குகிறாராம். விஜய்: தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி உச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தென்னிந்திய திரையுல...